சிவகங்கை:காளையார்கோவிலை அடுத்து உள்ள கொல்லங்குடியைச் சேர்ந்தவர்கள் ராமநாதன் - கலைச்செல்வி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர்.
ராமநாதன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில் மூத்த மகனான மாற்றுத்திறனாளி ஆனந்தன் தனது குடும்ப பாரம் முழுவதையும் ஏற்று நடத்தும் சூழலுக்குத் தள்ளப்பட்டார்.
மாற்றுத்திறனாளி என்று மனம் தளராமல் தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டுகள் நடைமுறையில் இருந்தபோது லாட்டரி சீட்டு விற்று தனது குடும்பத்தை கவனித்துவந்தார்.