சிவகங்கை: காரைக்குடி மீனாட்சிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் வெள்ளிகிழமை அம்மனுக்கு பச்சை மஞ்சள் பூசி அபிஷேகம் செய்து அம்மனை குளிர்வித்தால் விவசாயம் செழித்து அனைத்து மக்களும் நலமாக வாழ்வார்கள் என்பது பெண் பக்தர்களின் நம்பிக்கை.
ஆடி முதல் வெள்ளி - அம்மனுக்கு 500 கிலோ பச்சை மஞ்சள் அம்மியில் அரைத்த பெண்கள் - Adi
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அம்மனுக்கு அபிஷேகம் செய்வதற்காக 500 கிலோ பச்சை மஞ்சளை, 51 அம்மிக்கல்லில் வைத்து பெண்கள் அரைத்தனர்.
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு 500 கிலோ பச்சை மஞ்சள் அம்மியில் அரைத்த பக்தைகள்
இந்நிலையில் மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் ஆலயத்தில் 51 அம்மிக்கல் வைக்கப்பட்டு அதில் பெண் பக்தர்கள் 500 கிலோ பச்சை மஞ்சளை அரைத்தனர். அரைக்கப்பட்ட இந்த மஞ்சளை அம்மனுக்கு பூசி அபிஷேகம் செய்யப்படும்.
இதையும் படிங்க:தும்பவனத்தம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளியை ஒட்டி பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு..!