சிவகங்கை:நாடுமுழுவதும் உள்ளதெலுங்கு மொழி பேசும் மக்கள் இன்று (ஏப்ரல் 2) யுகாதி பண்டிகையை(வருடப்பிறப்பை) கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில், சிங்கம்புணரியில் உள்ள தெலுங்கு பேசும் மக்கள் யுகாதி பண்டிகையை கொண்டாடினர். ஆரிய வைசிய மகா சபைக்குச் சொந்தமான அருள்மிகு ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கோயிலுக்கு பால்குடம் எடுத்து வந்து வழிபாடு செய்தனர்.
Video: சிவகங்கை மாவட்டத்தில் யுகாதி பண்டிகை - தெலுங்கு மக்கள் பால்குடம் எடுத்து வழிபாடு - யுகாதி பண்டிகை 2022
சிவகங்கையில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு, தெலுங்கு பேசும் மக்கள் ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கோயிலுக்கு பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர்.

யுகாதி பண்டிகையை முன்னிட்டு மக்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
முன்னதாக சீரணி அரங்கம் பகுதியில் இருந்து பொதுமக்கள் பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியே வலம் வந்து கோயிலில் உள்ள அன்னை வாசவிக்கு அபிஷேகம் செய்தனர். அதைத்தொடர்ந்து சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று பொதுமக்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
யுகாதி பண்டிகையை முன்னிட்டு மக்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
இதையும் படிங்க: விசாரணைக்கு ஆஜரான நடிகர் எஸ்.வி சேகர் 'நான் இன்று மௌன விரதம்' எனப் பேட்டி