ராமநாதபுரம்:கடலாடி அருகேயுள்ள காவாகுளம் கிராமத்தில் இன்று (மே 02) கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்துகொண்டார். கிராம சபைக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஊராட்சியின் செயலர் செலவினங்களை வாசித்தார்.
அப்போது, ’ஆதிதிராவிடர் காலனி செலவிடப்பட்ட தொகை’ என வாசித்தார். உடனே கூட்டத்தில் இருந்த இளைஞர்கள் சிலர், ’தேவேந்திரகுல வேளாளர் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் ஆதிதிராவிடர் காலனி என எப்படி சொல்லலாம்’ என அமைச்சருக்கு முன்பாக கூச்சலிடத் தொடங்கினர். இதனால், கிராமசபைக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.