தண்ணீருக்காக அடிபட்ட புள்ளி மான்! - அடிபட்ட புள்ளிமான்
சிவகங்கை: கருங்காலக்குடியில் தண்ணீருக்காக ஊருக்குள் புகுந்த புள்ளிமான் நாய் துரத்தியதில் காயமடைந்தது.
![தண்ணீருக்காக அடிபட்ட புள்ளி மான்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4113798-thumbnail-3x2-deer.jpg)
deer
சிவகங்கை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக வன விலங்குகள் தண்ணீர் தேடி அடிக்கடி ஊருக்குள் நுழைவது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில், சோழபுரம் அருகே கருங்காலக்குடியில் தண்ணீர் தேடி ஊருக்குள் புள்ளிமான் ஒன்று நுழைந்தது. அப்போது அங்கிருந்த நாய்கள் புள்ளி மானை துரத்தியதால் தப்பிக்க ஓடியபோது கீழே விழுந்து அது அடிபட்டது. இதனைப் பார்த்த பொதுமக்கள் மானை மீட்டு வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.
அடிபட்ட புள்ளிமான் மீட்பு