சிவகங்கை:சிவகங்கை பகுதியில் உள்ள மளிகைக் கடையில் இருந்து வாங்கப்பட்ட பிரபல நிறுவனத்தின் சேமியா பாக்கெட்டில் உயிரிழந்த தவளை கிடந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பண்ணாரி அம்மன் நகரைச் சேர்ந்தவர் பூமிநாதன். இவர் தீபாவளிக்காக உணவு தயாரிப்பதற்காக, தனது வீட்டிற்க்கு அருகில் உள்ள மளிகை கடையில் பிரபல உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனத்தில் தயாரித்த சேமியா பாக்கெட்டை வாங்கி வந்துள்ளார்.
இதனையடுத்து, பாயாசம் செய்வதற்காக சேமியா பாக்கெட்டை பிரித்தபோது, அந்த பாக்கெட்டிற்குள் இறந்து நீண்ட நாளான தவளை காய்ந்து போன நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக சம்பந்தப்பட்ட கடைக்காரரை தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டுள்ளார்.