சிவகாசியில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக சுமார் இரண்டாயிரத்து 300 கோடி ரூபாய் அளவிலான பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டன. அவற்றில் 90 விழுக்காடு வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்பட்டன.
பட்டாசு வெடிக்கத் தடை விதித்ததால் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தேக்கம்!
சிவகாசியில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளில் இந்த ஆண்டு 1000 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தேக்கம் அடைந்துள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கரோனா அச்சுறுத்தல், சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு டெல்லி, ராஜஸ்தான், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பட்டாசு வெடிக்க இந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட பட்டாசுகளில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தேக்கமடைந்துள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.
வெளி மாநிலங்களில் பட்டாசுகள் தேக்கம் அடைந்துள்ளதால் அடுத்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்கான பட்டாசு உற்பத்திப் பணியை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் பட்டாசு உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.