தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

”தேர்வு மீதான அச்சத்தை போக்க மருத்துவ கவுன்சில் வழங்க வேண்டும்” - sivagangai latest news

தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்களுக்கு மருத்துவ கவுன்சில் வழங்கி மனதளவில் தயார் செய்ய வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மருத்துவ கவுன்சில்
மருத்துவ கவுன்சில்

By

Published : Sep 12, 2021, 8:33 PM IST

சிவகங்கை : கோகலே ஹால் பகுதியில் சுகாதார துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசி முகாமை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் ஆய்வு மேற்கொண்டு ஊசி செலுத்தியவர்களிடம் கலந்துரையாடினார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ”நீட் தேர்வு மட்டுமில்லாமல் அனைத்து தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு தேர்வு மீதான அச்சத்தை போக்க மருத்துவ கவுன்சில் வழங்க வேண்டும். சேலத்தில் நீட் தேர்வு பயத்தால் உயிரிழந்த மாணவனுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

நீட் தேர்வு தடைகோரி சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்றுவதுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சட்ட ரீதியில் நிரந்தர விலக்கு பெற முயற்சி மேற்கொள்ள வேண்டும். நாள் ஒன்றிற்கு இரண்டு கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தக்கூடிய கட்டுமான வசதிகள் தமிழ்நாட்டில் உள்ளது.

ஆனால் போதுமான தடுப்பூசிகளை ஒன்றிய அரசே வழங்க முன் வரவேண்டும்.காரைக்குடிக்கு வேளான் கல்லூரியும், சட்ட கல்லூரியும் கோரி முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தோம். அதனடிப்படையிலேயே காரைக்குடி அருகே இரண்டு கல்லூரியும் அமைக்க அமைச்சர்கள் அறிவித்துள்ளனர். இதில் எந்த பாகுபாடும் கிடையாது. சிவகங்கைக்கு மற்ற கல்லூரிகள் கொண்டு வரும் முயற்சிக்கு உறுதுனையாக இருப்பேன்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க : நீட் மரணம் - தற்கொலை செய்துகொண்ட மாணவர் குடும்பத்திற்கு நிதியளித்த உதயநிதி

ABOUT THE AUTHOR

...view details