சிவகங்கை: இளையான்குடியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் நகர் விரிவாக்கமடையச்செய்யும் பொருட்டு, ரூபாய் 3.75 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பேருந்து நிலைய கட்டுமானப் பணிக்குத் தேவையான மணலை அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், அனுமதியின்றி மணல் அள்ளி கட்டுமானப் பணி நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, 'அரசு நிலத்தை சேதப்படுத்தி மணல் அள்ளியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கனிமவள கொள்ளையைத் தடுக்க தவறிய அரசு அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இளையான்குடி காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்துள்ளேன்.
இளையான்குடி பேருந்து நிலையம் அமைக்க அரசு நிலத்தில் மணல் கொள்ளை - சமூக ஆர்வலர் குற்றச்சாட்டு பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு, அரசு விதிமுறையை மீறி அரசு புறம்போக்கு நிலத்தில் கனிம வள கொள்ளையில் ஈடுபட்டு வரும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வள்ளலார் முப்பெரும் விழாவைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்