சிவங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜபிரபு. இவர், மதுரை மாவட்டத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் கரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால், ராஜபிரபுவிடம் காப்பீட்டுக்கான அட்டை இல்லாத காரணத்தால், புதிய அட்டை பெற நோயாளியின் உறவினர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் உள்ள காப்பீட்டு அலுகத்தில் சென்று முயற்சி செய்துள்ளார். அங்கிருந்த அலுவலர்கள் நோயாளி நேரில் அலுவலகம் வரவேண்டும் எனக் கூறியுள்ளனர்.