தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிவகங்கை சாலை விபத்தில் உயிரிழந்த கர்ப்பிணிக்கு முதலமைச்சர் இரங்கல், நிவாரணம் அறிவிப்பு - road accident death

சிவகங்கை மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் மற்றும் அவரது தாயாரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து, ரூ.2 லட்சம் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சாலை விபத்தில் உயிரிழந்த கர்ப்பிணி மற்றும் தாயார் குடும்பத்திற்கு முதலமைச்சர் 2 லட்சம் நிதியுதவி
சாலை விபத்தில் உயிரிழந்த கர்ப்பிணி மற்றும் தாயார் குடும்பத்திற்கு முதலமைச்சர் 2 லட்சம் நிதியுதவி

By

Published : Oct 22, 2022, 8:31 AM IST

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், நெஞ்சத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நிவேதா என்பவரை அவரது பிரசவத்திற்காக உறவினர்களுடன் நெஞ்சத்தூர் கிராமத்திலிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் அழைத்துச் சென்றனர்.

அப்போது ஊத்திகுளம் அருகே எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தின் காரணமாக கர்ப்பிணி நிவேதா மற்றும் அவரது தாயார் விஜயலட்சுமி ஆகியோர் உயிரிழந்தனர். இந்த என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சியும், ஆழ்ந்த வருத்தமும் அடைந்தேன்.

இதே விபத்தில் காயமடைந்த அவ்வாகனத்தில் இருந்த 3 நபர்களுக்கு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறந்த சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:கணவனும் இரண்டாவது மனைவியும் மர்ம மரணம்; தற்கொலையா..? கொலையா..?

ABOUT THE AUTHOR

...view details