தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பயிர் சேதம் குறித்து மத்தியக்குழு ஆய்வு! - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி

சிவகங்கை: கற்களத்தூர் கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயிர் சேதம் குறித்து மத்தியக்குழு ஆய்வுசெய்தது.

central-committee-review-on-crop-damage
central-committee-review-on-crop-damage

By

Published : Feb 6, 2021, 9:50 AM IST

மத்திய உள்விவகாரத் துறை அமைச்சக இணைச் செயலாளர் அசுதோஷ் அக்னிகோத்ரி தலைமையில் மத்தியக் குழுவினர் சிவகங்கையில் ஏற்பட்ட மழை வெள்ள சேதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று (பிப். 5) பார்வையிட்டனர்.

இந்த ஆண்டு பருவமழையால் வயல்களில் மழைநீர் புகுந்து பயிர்கள் சேதமாகி, பெரும் பாதிப்புக்கு விவசாயிகள் ஆளானார்கள். இதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மத்தியக்குழு சிவகங்கை மாவட்ட பகுதிகளைப் பார்வையிட்டனர்.

பயிர் சேதம் குறித்து மத்தியக்குழு ஆய்வு

இந்த ஆய்வில் சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 36,122 ஹெக்டேர் நிலத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் சேதமாகி, 57,583 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:ஒரே நேரத்தில் வானில் செலுத்தப்படவுள்ள 100 மினி செயற்கோள்கள்!

ABOUT THE AUTHOR

...view details