சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோட்டையூரில் இரு சமுதாயத்தினரிடையே சுடுகாட்டில் எல்லைக்கல் ஊன்றுவது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த காவல் துறையினர், இருதரப்பினரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆலோசனையில் ஈடுபட்ட காவல்துறையினர் ஆனால் பேச்சுவார்த்தை பலனளிக்காததால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதைத் தடுக்க முற்பட்ட காவல் துறையினர் மீதும் கற்கள் வீசப்பட்டன. இதனையடுத்து கலவரக்காரர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
வீட்டினுள் இருந்து கற்களை வீசிய கலவரக்காரர்களை காவல் துறையினர் வீடு புகுந்து கைது செய்தனர். சம்பவ இடத்திற்கு நேரடியாக வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் கலவரத்தில் ஈடுப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார்.
கலவரத்தின் போது வீசப்பட்ட பெட்ரோல் குண்டுகள் இதன் அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும் கலவரம் பரவாமல் இருக்க கோட்டையூர், சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல் துறையினரின் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரு தரப்பிலும் 59 பேர் மீது வழக்குப்பதிந்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
காரைக்குடி அருகே இருதரப்பினரிடையே மோதல்