தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கார்கில் வெற்றி தின ஓட்டப் பந்தயம்; எல்லை பாதுகாப்பு படையினர் பங்கேற்பு!

சிவகங்கை: கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்ட நடைபெற்ற இரண்டு கி.மீ ஓட்டப் பந்தயத்தில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படையினர் பங்கேற்றனர்.

Cargill Memorial Day Race; Participation of border security steward

By

Published : Jul 27, 2019, 5:14 PM IST

சிவகங்கை அருகே உள்ள இலுப்பக்குடியில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையின் பயிற்சி மையம் அமைந்துள்ளது. இப்பயிற்சி மையத்தில் கார்கில் போரின் 20ஆவது வெற்றி தினத்தை நினைவுகூரும் வகையில் படைவீரர்களுக்கு ஓட்டப் பந்தய போட்டி நடைபெற்றது.

கார்கில் நினைவு தின ஓட்டப் பந்தயம்

2 கி.மீ. தொலைவு நடைபெற்ற இந்த ஓட்டப் பந்தயத்தை, எல்லைப் பாதுகாப்புப் படை டிஐஜி ரன்பீர் சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இப்போட்டியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பயிற்சி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் முதல் இரண்டு இடங்களை பிடித்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கபட்டன.

அதனையடுத்து பேசிய டிஐஐி ரன்பீர் சிங், ”இந்திய - பாக் எல்லையில், கார்கிலில் நமது ராணுவ வீரர்களின் வெற்றியையும், தியாகத்ததையும் போற்றும் விதமாக எந்தவித தாக்குதலையும் எதிர்கொள்ள நமது வீரா்கள் தயார் நிலையில் இருப்பதனை எடுத்தக்காட்டும் நிகழ்வாக, இந்த கார்கில் நினைவு ஓட்டப் பந்தயம் நடைபெற்றது” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details