தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காருக்குள் சிக்கி ஆற்றில் தத்தளித்த 5 நபர்கள் - துணிச்சலாக செயல்பட்டு காப்பாற்றிய இளைஞர்! - கால்வாயில் விழுந்த கார்

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகில் சாலையில் சென்று கெண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கார் விழுந்துள்ளது. இதைக்கண்ட இளைஞர் ஒருவர் துணிச்சலோடு நீரில் இறங்கி, காரில் இருந்தவர்களைக் காப்பாற்றிய செயல் அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

சிவகங்கை அருகே காருக்குள் சிக்கி ஆற்றில் தத்தளித்த 5 நபர்கள்
சிவகங்கை அருகே காருக்குள் சிக்கி ஆற்றில் தத்தளித்த 5 நபர்கள்

By

Published : Nov 9, 2021, 8:35 PM IST

சிவகங்கை: மதுரையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி 3 பெரியவர்கள், 2 குழந்தைகளுடன் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் கார் வந்தபோது, சாலை ஓரமாக செல்லும் கால்வாயில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விழுந்தது.

சிவகங்கை அருகே காருக்குள் சிக்கி ஆற்றில் தத்தளித்த 5 நபர்கள்

தொடர்மழை காரணமாக கால்வாய்களில் நீர் அதிகளவு சென்றுகொண்டிருப்பதால், கார் நீரில் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்தது.

தன் உயிரைத் துச்சமெனக்கருதி 5 பேரைக் காப்பாற்றிய முத்து

அப்போது அவ்வழியாக சென்ற இளைஞர் ஒருவர் காருடன் கால்வாயில் தத்தளித்துக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து, தன் உயிரைப் பணயம் துணிச்சலுடன் கால்வாயில் குதித்து காரில் சிக்கித் தவித்தவர்களைக் காப்பாற்றினார்.

இளைஞரின் இச்செயல் அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. துணிச்சலுடன் செயல்பட்ட இளைஞர், திருப்புவனம் வைகை வடகரையைச் சேர்ந்த முத்து ‌என்பது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: கரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ. 50ஆயிரம் இழப்பீடு

ABOUT THE AUTHOR

...view details