தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயிலுக்குச் சென்ற இடத்தில் சோகம்: பள்ளத்தில் கார் கவிழ்ந்து 2 பேர் பலி - சிவகங்கை அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து 2 பேர் உயிரிழப்பு

கோயிலுக்குச் சென்றபோது கார் ஓட்டுநரில் கட்டுப்பாட்டை இழந்து கார் (car) பள்ளத்தில் கவிழ்ந்ததில், இரண்டு பேர் (2 killed) உயிரிழந்தனர்.

road accident
road accident

By

Published : Nov 21, 2021, 5:21 PM IST

சிவகங்கை:கோயம்புத்தூர் மாவட்டம் (Coimbatore) சேரன்மாநகரைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவர் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் என ஒன்பது பேர் காரில் சிவகங்கை மாவட்டம், தாயமங்கலத்திலுள்ள கோயிலுக்கு (Temple) சென்றுள்ளனர்.

அப்போது மானாமதுரை - தாயமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் (car) சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் பாண்டி (45), ஆர்த்தி (17) இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காரில் பயணித்த குமார், அய்யப்பன், தேவி, திருஞானம் உள்ளிட்ட ஏழு பேர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து படுகாயமடைந்தவர்களை காவல் துறையினர் மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கங்கனா ரணாவத் மீது சீக்கிய அமைப்பின் தலைவர் புகார்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details