தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விபத்தில் அடிப்பட்டவர்களுக்கு உதவிகரம் நீட்டிய ஹெச். ராஜா - சிவகங்கை

சிவகங்கை: காரைக்குடி அருகே கார் விபத்தில் அடிபட்டவர்களை பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மற்றும் உடனிருந்த நிர்வாகிகள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் அடிப்பட்டவர்களுக்கு உதவிகரம் நீட்டிய ஹெச். ராஜா

By

Published : Mar 30, 2019, 5:05 PM IST


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மானகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டு இருந்த கார் ஒன்று, தேவகோட்டை ரஸ்தா அருகிலுள்ள வளைவில் திரும்பும்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில்விழுந்து விபத்துக்குள்ளானது.

அப்போது அந்த வழியாக பாஜகஊழியர் கூட்டத்தில் பங்கேற்க பாஜக தேசியச் செயலாளரும் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான ஹெச்.ராஜா, மற்றும் அதிமுக மாவட்ட கழக செயலாளரும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமானசெந்தில்நாதன் உள்ளிட்டோர் அவ்வழியாக சென்றுகொண்டு இருந்தனர்.

விபத்தில் அடிப்பட்டவர்களுக்கு உதவிகரம் நீட்டிய ஹெச். ராஜா

வாகன விபத்தை கண்ட இருவரும் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வேறு ஒரு காரில் மானகிரியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details