சிவகங்கை: காரைக்குடி அருகே அரியக்குடி கிராமத்தில் பிரசித்த பெற்ற தென்திருப்பதி என்று அழைக்கப்படும் திருவேங்கடமுடையான் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான சாமிவீடு சுற்றிலும் இந்துக்கள் வசித்து வரும் நிலையில், கோயில் வீடு அருகில் லிம்ராடிரஸ்ட் என்ற பெயரில் வீடு கட்டுவதாக அனுமதி பெற்று மஸ்ஜிதுர் ரஹ்மான் மத்ரஸா ஜும்மா பள்ளி கட்டப்பட்டது.
இந்நிலையில் விதிகளை மீறி கட்டடம் கட்டப்பட்டுள்ளதாக ஊராட்சி தலைவர் அந்த அனுமதியை ரத்து செய்துள்ளார். இந்நிலையில் வரும் 7ம் தேதி மஸ்ஜிதுர் ரகுமான் மத்ரஸா ஜும்மா பள்ளியை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி திறந்து வைக்க உள்ளதாகவும், அமைச்சர் பெரியகருப்பன், எம்.பி கார்த்திக் சிதம்பரம் கலந்து கொள்ளுவதாக அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மஸ்ஜிதுர்ரஹ்மான் மத்ரஸா ஜிம்மாபள்ளி திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விசுவ இந்து பரிசீத் மற்றும் இந்து முன்னணி, பாஜகவினர் 100க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
தற்போது காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியரிடம், முறையான அனுமதி பெறாமல் பள்ளிவாசல் திறக்க கூடாது என்று வட்டாட்சியர் மாணிக்கவாசகம், டிஎஸ்பி வினோஜி தலைமையிலான கூட்டத்தில் பள்ளிவாசல் திறக்க ஏற்பாடுகள் செய்துள்ள லிம்ரா டிரஸ்ட் நிர்வாகிகளிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கோயில் அருகே பள்ளிவாசல் திறப்பு; எதிர்ப்பு தெரிவித்து திரண்ட பாஜக, இந்து முன்னணியினரால் பதற்றம் இதையும் படிங்க:கருணாநிதியின் பேனா நினைவுச்சின்னம் - தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதிய மத்திய சுற்றுச்சூழல் துறை