சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. 6 கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வுப் பணியின் போது கீழடி மட்டுமன்றி அதன் அருகே உள்ள கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய பகுதிகளிலும் பணிகள் நடைபெற்றன. கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஆறாம் கட்ட அகழாய்வு நிறைவுற்றது.
கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வு பணிகளுக்கான பூமி பூஜை! - அகழாய்வு பணிகளுக்கான பூமி பூஜை
சிவகங்கை: கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகளுக்கான பூமி பூஜை இன்று (பிப்.6) நடைபெற்றது.
இந்நிலையில், அப்பகுதியில் ஏழாம் கட்ட அகழாய்வுக்கு மத்திய தொல்லியல்துறை அனுமதி வழங்கியிருந்த நிலையில், மீண்டும் கீழடி கொந்தகை, அகரம், மணலூர் பகுதிகளில் தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வு பணிகளில் ஈடுபடும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
அதன்படி இன்று (பிப்.6) கொந்தகை அகழாய்வு பணிகளுக்கான பூமி பூஜையும், சுத்தப்படுத்தும் பணிகளும் தொடங்கின. முதலமைச்சர் பழனிசாமி, கீழடி 7ஆம் கட்ட அகழாய்வு பணிகளைக் காணொளி மூலம் தொடங்கி வைத்தார். இதில் தமிழ்நாடு தொல்லியல் துறையைச் சார்ந்த அலுவலர்கள், உள்ளூர் மக்கள் கலந்து கொண்டனர்.