சிவகங்கையைஅடுத்த தேவகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் அல்லா ஹயர் சையது. இவர் தனக்குச் சொந்தமான நிலத்தை விற்றுப் பல லட்சம் பணம் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் நடைப்பயிற்சி செல்லும்போது அதே தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த பிரபல தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் மேலாளர் பாலகிருஷ்ணன் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அச்சமயம் அல்லா ஹயர் தான் தற்பொழுது வருமானம் இன்றி தவித்து வருவதாக மேலாளர் பாலகிருஷ்ணனிடம் கூறவே இடம் விற்பனை செய்து பணம் வைத்திருந்ததை அறிந்த பாலகிருஷ்ணன் தங்களது வங்கியில் டெபாசிட் செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என்று கூறினார்.
நிலம் விற்ற பணத்தை கொண்டு சென்று வங்கியில் டெபாசிட் செய்ய முற்பட்டபோது தன்னுடைய லாக்கரில் பணத்தை வைக்கக் கோரியும் அதனை வேறு விதத்தில் டெபாசிட் செய்தால் அதன் மூலம் லாபம் பெறலாம் என மேலாளர் கூறியதை நம்பி அவரிடம் சுமார் ரூ.36 லட்சம் பணத்தை வழங்கியதுடன் அவர் கூறியதால் வாங்கிய 50 பவுன் தங்கக் காசுகளையும் அவரிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்நிலையில் வாங்கிய ரூ.36 லட்சம் பணத்தையும் 50 பவுன் தங்கக் காசுகளையும் திருப்பி தராமல் மேலாளர் பாலகிருஷ்ணன் அலைக்கழித்ததாக்கக் கூறப்படும் நிலையில் அல்லா ஹயர் சிவகங்கை எஸ்.பி செந்தில்குமாரிடம் மனு அளித்த நிலையில் விசாரணை மேற்கொண்ட மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மேலாளர் பாலகிருஷ்ணனை இன்று(அக்.19) கைது செய்தனர்.
வாடிக்கையாளரிடம் மோசடி செய்த வங்கி மேலாளர் கைது இதையும் படிங்க:பாஜக பிரமுகரின் கார் எரிப்பு வழக்கு - ஈரோட்டில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் ஒருவர் கைது