தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிணையில் வெளிவந்த இளைஞர் வெட்டிக் கொலை - சிவகங்கை

சிவகங்கை: பிணையில் வெளிவந்த இளைஞரை முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By

Published : Mar 17, 2019, 8:22 PM IST

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே பி.வேளாங்குளத்தைச் சேர்ந்தவர் பிரசாத் (24) என்கிற அருண்பாண்டியன்.

இவரது தந்தை பாலாமணி. கடந்த ஆண்டு மே மாதம் சிவகங்கை மாவட்டம் கச்சநத்தத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பேர் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் பிரசாத் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பிரசாத் மதுரை சிறையில் அடைக்கப்பட்டு சிலநாட்களுக்கு முன் பிணையில் வெளிவந்தார்.

இந்நிலையில் இன்று காலை பிரசாத் திருப்பாசேத்தி அருகே உள்ள கண்மாயில் கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து அங்கு வந்த திருப்பாசேத்தி போலீசார் உடலை மீட்டு சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் முன்விரோதம் காரணமாக இக்கொலை நடத்தப்பட்டதா எனும் கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details