சிவகங்கை மாவட்டம் சீபி காலனியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் கண்ணன் (27). இவர் இன்று பிற்பகல் 12 மணி அளவில் திருப்பத்தூர் சாலையில் உள்ள இலந்தன்குடிபட்டி கண்மாய் அருகே ஆட்டோவில் அமர்ந்து செல்போன் பேசிக் கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் ஆட்டோ ஓட்டுநர் கண்ணனை வெட்ட முயன்றனர். இதனையடுத்து கண்ணன் கண்மாய்க்குள் இறங்கி ஓட ஆரம்பித்தார். ஆனால் அவரை விடாமல் துரத்தி வந்த அந்தக் கும்பல் கண்ணனை உடலின் பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டினர். இதில், கண்ணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.