தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இருப்பிட சான்றிதழ் தராமல் இழுத்தடிக்கும் அரசு இ சேவை மையம்!!

அரசு இ சேவை மையத்தில் குழந்தையை பள்ளியில் சேர்ப்பதற்காக இருப்பிடச் சான்றிதழ் விண்ணப்பித்து பெற முடியாமல் அலைக்கழிக்கப்படுவதாக ஆட்டோ ஓட்டுனர் புகார் தெரிவித்துள்ளார்.

ஆட்டோ காரருக்கு இருப்பிட சான்றிதழ் தராமல் இழுத்தடிக்கும் அரசு இ சேவை மையம்!!
ஆட்டோ காரருக்கு இருப்பிட சான்றிதழ் தராமல் இழுத்தடிக்கும் அரசு இ சேவை மையம்!!

By

Published : Jul 12, 2022, 3:28 PM IST

சிவகங்கை பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் முருகன். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தனது குழந்தையை பள்ளியில் சேர்ப்பதற்காக இருப்பிட சான்றிதழ் கோரி விண்ணப்பம் செய்வதற்காக தொடர்ந்து பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு இ சேவை மையத்திற்கு சென்றதாகவும், அங்கு இயந்திரம் வேலை செய்யவில்லை என்றும், மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது என்றும், தொடர்ந்து காரணங்களை கூறி வந்துள்ளனர்.

சேவை மைய ஊழியர் தனியார் மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்குமாறு தெரிவித்ததாகவும் அன்றாடம் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தும் தான், தனியார் மையங்களில் அதிக பணம் கொடுத்து குழந்தைக்கு சான்றிதழ் பெறுவது மிகவும் கடினமான செயல் என்று வருத்தம் தெரிவித்தார்.

ஆட்டோ காரருக்கு இருப்பிட சான்றிதழ் தராமல் இழுத்தடிக்கும் அரசு இ சேவை மையம்!!

இதுபோன்று அரசு இ சேவை மையங்களில் குறைகள் இருப்பின் அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். அப்படி இல்லாமல் ஊழியர்கள் தனியார் மையங்களை பரிந்துரை செய்கிறார்கள் என்றால், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: பேருந்து மீது டேங்கர் லாரி மோதி விபத்து..! 10 பேர் காயம்

ABOUT THE AUTHOR

...view details