சிவகங்கை:கீழடி அருகேயுள்ள கொந்தகையில் தற்போது தமிழக தொல்லியல் துறையின் சார்பாக 4-ஆம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. கீழடியில் 9-ஆம் கட்ட அகழாய்வு நடைபெற்று வரும் நிலையில், தற்போது மழைக்காலம் துவங்கவிருப்பதால், அகழாய்வுப் பணிகள் நிறைவை எட்டியுள்ளன.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஈமக்காடு என்பதால், கொந்தகையில் முதுமக்கள் தாழிகள் அதிக எண்ணிக்கையில் கிடைத்து வருகின்றன. பல்வேறு வகையான ஈமச்சடங்குகள் இங்கு நிலவியுள்ளன என்பதையும், அங்கு நடைபெறும் அகழாய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் 4-ஆம் கட்ட அகழாய்வில் கருப்பு, சிவப்பு நிறமுள்ள தாழியொன்றில் 2 சூதுபவள மணிகள் 17.5 செ.மீ மற்றும் 20 செ.மீ ஆழத்தில் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், இவ்விரண்டு மணிகளும் பீப்பாய் வடிவில் சராசரியாக 1.3 செ.மீ நீளத்திலும், 2.3 செ.மீ விட்டத்திலும் உள்ளது.