திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி வாணியம்பாடி, ஆம்பூர், ஆலங்காயம், திருப்பத்தூர், நாட்றம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலை அவரது இல்லத்தில் நேரில் சென்று சந்தித்து மரக்கன்றுகளை வழங்கி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது ஆலங்காயத்தை அடுத்த குரிசிலாப்பட்டு ஒன்றியத்திற்குட்பட்ட அமமகவிலிருந்து விலகி, அக்கட்சியின் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பெரியசாமி தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் அமைச்சர் நிலோபர் கபில் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.