அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மானாமதுரை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த டிடிவி தினகரன் 7ஆவது வார்டில் கட்சி கொடியினை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது எதிர்க்கட்சி யார் என்ற அதிமுகவினர் கூறிவரும் கருத்துக்கு பதில் அளித்த டிடிவி தினகரன் அட்டகத்தி வீரர்களுக்கு பதில் சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன். இன்று தமிழ்நாட்டில் மக்கள் விரோத ஆட்சி, மக்கள் விரும்பாத ஆட்சி, தடுமாறுகின்ற ஆட்சி நடைபெறுகிறது.
அரசாங்க மேடையில் முதலமைச்சர் ஸ்டாலின் திராவிட மாடல், திமுக மாடல் என்று வரம்பு மீறி பேசியிருக்க வேண்டாம் என்று நான் நினைக்கிறேன். தேர்தல் அறிக்கையில் கூட ஸ்டாலின் ஒன்றிய அரசு திராவிட மாடல் பற்றி சொல்லவில்லை. தேர்தல் முடிந்த பிறகு திராவிட மாடல் திராவிட மாடல் என்று சொல்கிறார்.