தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பாரதிக்கு பின்னர் தனது கவிதைகளால் தமிழுக்குப் பெருமை சேர்த்தவர் கண்ணதாசன்' - கார்த்திக் சிதம்பரம் பேட்டி

தமிழ்நாட்டில் பாரதியாருக்குப் பின்னர், தனது கவிதைகளால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, தமிழுக்குப் பெருமை சேர்த்தவர் கவியரசு கண்ணதாசன் என கார்த்திக் சிதம்பரம் பேசினார்.

தமிழ்நாட்டில் பாரதியாருக்கு பின்னர் தனது கவிதைகளால் தமிழுக்கு பெருமை சேர்த்தவர் கவியரசு கண்ணதாசன்
தமிழ்நாட்டில் பாரதியாருக்கு பின்னர் தனது கவிதைகளால் தமிழுக்கு பெருமை சேர்த்தவர் கவியரசு கண்ணதாசன்

By

Published : Jun 24, 2022, 4:06 PM IST

சிவகங்கை: காரைக்குடி அருகே கண்ணதாசனின் 96ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

கவியரசு கண்ணதாசனின் 92ஆவது பிறந்த நாள் விழாவானது அவரது சொந்த ஊரான சிறுகூடல்பட்டியில் கொண்டாடப்பட்டது. அங்கு உள்ள கண்ணதாசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், 'தமிழ்நாட்டில் பாரதியாருக்கு பின்னர் தனது கவிதைகளால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, தமிழுக்குப்பெருமை சேர்த்தவர் கவியரசு கண்ணதாசன்.

'அக்னிபத்' ஒரு விபரீதமான திட்டம் இதனால் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். பாதிக்கப்படுபவர்களை கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு முடிவுகளை அறிவிக்கின்றது. பஞ்சாப் தேர்தலுக்காக வேளாண்சட்டத்தை வாபஸ் பெற்றதைப் போல், 'அக்னிபத்' திட்டத்தை வாபஸ் வாங்குவார்கள்.

தாங்கள் முன்மொழிந்த தீர்மானத்தை நிராகரித்த முதல் கட்சி அதிமுக தான். அதிமுக முன்னர் ஒற்றைத்தலைமையின் கீழ்தான் செயல்பட்டு வந்தது.

தற்போது அந்த திசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. முதலாளியைச் சந்தித்து ஆலோசனைப் பெறுவதற்காக ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றுள்ளார்' என்று கூறினார்.

'பாரதிக்கு பின்னர் தனது கவிதைகளால் தமிழுக்குப் பெருமை சேர்த்தவர் கண்ணதாசன்' - கார்த்திக் சிதம்பரம் பேட்டி

இதையும் படிங்க: சிவகங்கை அருகே முதுமக்கள் தாழிகள், கல்வெட்டு கண்டுபிடிப்பு!

ABOUT THE AUTHOR

...view details