சிவகங்கை மேலூர் சாலையிலுள்ள கால்நடை மருத்துவமனையில், கால்நடைத் துறை சார்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அவசர ஊர்தி சேவையை காதி மற்றும் கதர் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
தேமுதிகவை கூட்டணியில் வைத்துக் கொண்டே விஜயகாந்தை விமர்சித்த அமைச்சர்! - admk minister troll vijayakanth
சிவகங்கை: அதிமுகவின் கூட்டணி கட்சியாக தேமுதிக உள்ள நிலையில், அதன் தலைவர் விஜயகாந்தை அமைச்சர் பாஸ்கரன் விமர்சித்திருப்பது தேமுதிக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
admk minister troll dmdk leader vijayakanth
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “காரைக்குடியை தனி மாவட்டமாக பிரிக்கும் எண்ணம் அரசிற்கு இல்லை. நடிகர்கள் எல்லாம் கட்சி ஆரம்பிக்கிறார்கள், விஜயகாந்த்தும் கூட ஆரம்பித்தார். ஆனால் அவரால் நிலைத்து நிற்க முடியவில்லை. அதேபோல் இனிவரும் காலங்களில் நடிகர்கள் கட்சி ஆரம்பித்தாலும் அது செல்லாது” என்றார்.
இதையும் படிங்க: சிவாஜிகணேசன் நிலைதான் அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கும் -அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்!