தொடங்கியது ஆடி - கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம் - ஆடி தள்ளுபடி
சிவகங்கை: ஆடி மாதம் தொடங்கிய நிலையில், காரைக்குடியில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் பட்டுச்சேலை வாங்க வாடிக்கையாளர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
![தொடங்கியது ஆடி - கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3862602-thumbnail-3x2-aadi.jpg)
aadi
ஆடி மாதம் என்றாலே தள்ளுபடிதான் அனைவரின் நினைவிற்கும் வரும். இந்த மாதத்தில் ஜவுளிக்கடை, நகைக்கடை உள்ளிட்ட நிறுவனங்களில் தள்ளுபடி விற்பனை நடைபெறுவது வழக்கம். அப்போது தள்ளுபடி மூலம் குறைந்த விலையில் ஆடைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவர். அந்தவகையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில், ஆண்டுதோறும் ஆடி முதல் தேதியன்று வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி விலையில், பட்டுச்சேலை விற்பனை செய்யப்படுவது வழக்கம்.
கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்