சிவகங்கை:மானாமதுரையில் இருந்து சுமார் 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு சிவகங்கை நோக்கி சென்ற தனியார் பேருந்து, சுந்தரநடப்பு பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தது.
அப்போது மானாமதுரையில் இருந்து பால் ஏற்றிக்கொண்டு சிவகங்கை நோக்கி சென்ற டேங்கர் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி பேருந்தின் பின்னால் மோதியது. இதில் 7 பெண்கள் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.