சிவகங்கை:சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் மலேசிய நாட்டிற்கு வேலைக்கு சென்ற நிலையில், போதைக் கும்பலிடம் சிக்கி, காவல்துறையால் மீட்கப்பட்டு, காவல் பாதுகாப்பில் இருக்கிறார்
இந்நிலையில் தன்னை மீட்கக்கோரி உருக்கமான கடிதம் மற்றும் வீடியோக்களை தனது சகோதரனுக்கு அவர் அனுப்பியுள்ளார்.
இதையறிந்த அவரது பெற்றோர் தங்களது மகனை மீட்டு தரக்கோரி அரசிற்கு கண்ணீர் மல்க கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
முத்துப்பட்டி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கண்ணன், முத்து தம்பதியர். கண்ணன் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள், இரண்டு மகன்கள் உள்ள நிலையில் மூத்த மகன் சரத்குமார் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார். பெண்கள் இருவருக்கும் திருமணமாகியுள்ளது.
குடும்ப வறுமையினால் வெளிநாட்டில் வேலை
கடைசி மகனான ஆனந்த் தொழிற்கல்வி முடித்து, ஊரிலேயே கிடைத்த வேலைகளைப் பார்த்து வந்த நிலையில் குடும்ப வறுமை காரணமாக, அதே முத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மற்றும் காரைக்குடி கோட்டையூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்கிற ஏஜெண்ட்கள் மூலமாக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் தேதி கோயில் கட்டுமானப் பணிக்கென மலேசிய நாட்டிற்கு சென்றுள்ளார்.