மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் பனங்குடி கிராமம் சிவகங்கைஅடுத்தகாரைக்குடி அருகே உள்ளது, பனங்குடி கிராமம். இந்த கிராமத்தில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ஒற்றுமையாக மத வேறுபாடு இன்றி வசிக்கின்றனர். இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் என மும்மதத்தினரின் வழிபாட்டுத்தலங்கள் அருகருகே அமைந்துள்ளன.
இந்த ஊரில் உள்ள பள்ளிவாசல் 200 ஆண்டுகள் பழைய கட்டடம் ஆக இருந்துள்ளது. தற்போது அது மிகவும் சிதிலமடைந்து இருந்திருக்கிறது. அதனைத்தொடர்ந்து அங்கு புதிய பள்ளிவாசல் கட்ட ஜமாத் தலைவர் தலைமையில் கிராமத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் இணைந்து கட்டிய பள்ளிவாசல் அதனைத்தொடர்ந்து பெருவாரியாக உள்ள இந்து மக்களும், கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் இணைந்து வீட்டுக்கு வீடு புள்ளி வரி வசூல் செய்து சுமார் ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் பிரமாண்டமான புதிய முகைதீன் ஆண்டவர்ஜும்மா பள்ளிவாசலை, சமீபத்தில் இந்து கோயிலில் வழிபாடு செய்தபின் மதநல்லிணக்கம் போற்றும் வகையில் திறந்து வைத்து கிராம மக்கள் மகிழ்ந்தனர்.
ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி தங்கள் கிராமத்திருவிழாபோல் பள்ளிவாசல் திறப்பு விழாவை கொண்டாடி உவகை தெரிவித்தனர். மத பிரிவினைவாதம் பேசும் மதவாதிகளுக்கு மத்தியில் தமிழர்களின் மத ஒற்றுமைக்கு பனங்குடி மக்கள் எடுத்துக்காட்டாக மாறியுள்ளனர்.
இதையும் படிங்க:கரோனா பரவலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - அமைச்சர் சு.முத்துசாமி