சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாலையூரில் உள்ள காசிம் ராவுத்தர் தெருவில் வசித்து வரும் அப்துல் கபீரின் ஏழு வயது பெண் குழந்தை நூருல் அஸ்பியர் டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் பத்து நாட்களாக இளையான்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று உயிரிழந்தார்.
டெங்கு காய்ச்சலுக்கு ஏழு வயது சிறுமி பலி! - டெங்கு காய்ச்சல்
சிவகங்கை: டெங்கு காய்ச்சல் காரணமாக ஏழு வயது சிறுமி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோல் பல குழந்தைகள் காய்ச்சல் வந்து பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனை. மற்றும் சிவகங்கை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பேருராட்சியின் அலட்சியம் காரணமாக தெருக்களில் குண்டும் குழியுமாக உள்ள இடத்தில் மழை நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி ஆகிறது.
கொசு புகை மருந்து அனைத்து தெருக்களிலும் அடிப்பது இல்லை மற்றும் தெருவில் உள்ள குப்பைகள் சரிவர எடுப்பதும் இல்லை என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. இதனால் மர்ம காய்ச்சல் ஏற்படுவது மட்டும் இன்றி சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது என்று அப்பகுதி மக்கள் கூறிவருகின்றனர்.