சிவகங்கை:கீழடியில் எட்டாம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கீழடியில் ஐந்து குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஒரு குழியில் தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்யும் பொழுது அழகிய வேலைபாடுகளுடன் அடங்கிய சுடுமண் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது பார்ப்பதற்கு அழகிய கண்கள் மற்றும் நெற்றி கொண்ட பெண் போன்ற அமைப்பை உடையதாகத் தெரிகிறது. தொல்லியல் துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது. மேலும், இது தற்போது நடந்து வரும் கீழடி எட்டாம் கட்ட அகழாய்வில் கிடைத்துள்ள முதல் சுடுமண் சிற்பம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த சுடுமண் சிற்பத்தைத் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் ”மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?? அழகர் மலை அழகா இல்லை இந்த சிலை அழகா?? “ என்ற அழகிய அடைமொழியுடன் பதிவேற்றம் செய்துள்ளார்.
இது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. தொல்லியல் துறையினர் இதைத் தொடர்ந்து ஆய்வு செய்யும் பட்சத்தில் இதனுடைய முழு விவரம் குறித்தும் தெரியவரும் என்று தொழில் துறை ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கீழடியில் , அகரம் கொந்தகை மூன்று இடங்களிலும் அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றது.
இதையும் படிங்க: "சின்னக் கலைவாணர் விவேக் சாலை"- முதலமைச்சருக்கு நடிகர் பூச்சி முருகன் நன்றி!