சிவகங்கை:வேம்பத்தூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முனைக்குளம் கிராமம் அருகே சருகனேந்தல் என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது. இதில் ஹரிவேலன் என்கிற 7ஆம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்திலேயே பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தான்.
சிவகங்கையில் பயங்கரம்: தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து 7ஆம் வகுப்பு மாணவன் பலி! - harivelan
தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து 7 ஆம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். மேலும், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலத்த காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும், 20க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் காயமடைந்த பள்ளி குழந்தைகளுக்கு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த பள்ளி வாகனம் கவிழ்ந்த விபத்தில் மாணவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடியுள்ளனர்.
இதையும் படிங்க:2026 சட்டப்பேரவைத்தேர்தல்.. பனையூரில் குவிந்த நிர்வாகிகள்... விஜயின் அடுத்த மூவ் என்ன?