சிவகங்கை: குன்னத்தூர் கிராமத்தில் சிவகங்கை மாவட்ட சேர்மன் பொன்.மணிபாஸ்கரனின் மகள் ஹரிப்பிரியா, ஜெயக்குமார் திருமணம் சென்னையில் நடைபெற்றது. தங்களது மகள் பிரமாண்ட திருமண விழாவை காண இயலாத தனது சொந்த கிராம மக்களுக்காக குன்னாரம்பட்டியில் சேர்மன் பொன்.மணிபாஸ்கரன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.
தன் கிராம மக்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கறி விருந்தில் பசியாறி மகிழ்ந்து செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரமாண்ட பந்தல் அமைப்பை கடந்த ஒரு மாதமாக தயார் செய்து வந்தார். திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக எஸ்.புதூர் ஒன்றியம் முழுவதும் வீடு தவறாமல் வரவேற்பு அழைப்பு கொடுக்கப்பட்டது.
கரோனா காலத்தில் சேர்மன் பொன்.மணிபாஸ்கரன் வீடு தவறாமல் செய்த உதவியால் அந்த பகுதி மக்கள் குன்னத்தூர் பெரிய கண்மாய் சாலையில் 504 கிடாய் பாத்திரம், குத்துவிளக்கு, பழம் என 350 தட்டுகளும் கண்ணுக்கு எட்டிய தூரம் சீர்வரிசை பொருட்களாக சுமந்து வந்து தாய் வீட்டு சீதனமாக கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.