சிவகங்கை:காரைக்குடி, திருப்பத்தூர் உள்ளிட்டப் பல பகுதிகளில், கடந்த சில நாள்களாக சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் தொடர்ச்சியாக திருடப்பட்டு வந்தன.
இந்நிலையில் இந்தத் திருட்டு கும்பலைப் பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் உத்தரவின்பேரில், எஸ்.ஐ ரஞ்சித்குமார் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது.
திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களைத் தேடிவந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் ஆறு பேரைப் பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தொடர் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்தது அவர்கள்தான் என உறுதியானது.
இருசக்கர வாகனத் திருட்டு கும்பல் கைது
அதனைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர்கள் வாடிப்பட்டியைச் சேர்ந்த சோனைமுத்து, சிவகங்கை சுண்ணாம்பு காளவாசல் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார், செல்லப்பாண்டி, நாகராஜ், சிவகங்கை கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சக்கரவர்த்தி, திண்டுக்கல் மாவட்டம் கவுண்டன்பட்டியைச் சேர்ந்த அரவிந்த் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களைக் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் இருந்த 11 விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:முன்னாள் அதிமுக எம்எல்ஏ கார் திருட்டு - 2 பேர் கைது