தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிவகங்கை அருகே போலி மதுபானம் தயாரிப்பு – 3 பேர் கைது

மதகுபட்டி அருகே செயல்பட்டுவந்த போலி மதுபான ஆலையை நுண்ணறிவு போலீசார் கண்டுபிடித்ததுடன், அதனை நடத்திவந்த 3 பேரை கைது செய்து தளவாட பொருள்களை பறிமுதல் செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே போலி மதுபானம் தயாரித்த 3 பேரை தனிபிரிவு போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே போலி மதுபானம் தயாரித்த 3 பேரை தனிபிரிவு போலீசார் கைது செய்தனர்.

By

Published : Jul 7, 2022, 6:50 PM IST

சிவகங்கை:மதகுபட்டி அருகேவுள்ள அம்மச்சிபட்டி கிராமத்தில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான தோப்பு வீட்டில் போலி மதுபானம் தயாரிக்கப்படுவதாக மதுரை டி.ஐ.ஜி தனிப்படை நுண்ணறிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் தனிப்படை போலீசார் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் ராஜேந்திரனின் உதவியுடன் பாண்டிச்சேரியை சேர்ந்த ராம்குமார் என்கிற ரெட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மாரிமுத்து ஆகியோர் போலி மதுபானம் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவர்கள் மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் மதுபானம் தயாரிக்க பயன்படுத்திய எந்திரம், 2 ஆயிரம் காலி பாட்டில்கள், பிரபல மதுபான பெயர்கொண்ட போலி ஸ்டிக்கர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

போலி மதுபானம் தயாரிப்பு

போலி மதுபான ஆலை நுண்ணறிவு போலீசாரால் 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பாண்டிச்சேரி சேர்ந்த ராம்குமார் என்ற ரெட்டி புதுக்கோட்டையைச் சேர்ந்த மாரிமுத்து ஆகியோர் ADGP மகேஷ் குமார் அகர்வால், IG துரை குமார் உத்தரவின் பேரில் மத்திய நுண்ணறிவு போலீசாரால் நீண்ட நாள்களாக தேடப்பட்ட குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க:போதையில் இளைஞர்கள் தகராறு - சமாதானம் செய்ய முயன்றவருக்கு சரமாரி அடி

ABOUT THE AUTHOR

...view details