சிவகங்கைமாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் புகழ்பெற்ற கற்பகவிநாயர் (Pillayarpatti Karpaga Ganesha Temple) ஆலயத்தில் 2023ஆம் ஆண்டின் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி இன்று (ஜன.1) அதிகாலை 3:30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 4:00 மணிக்கு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து மூலவர் கற்பக விநாயகர் தங்க கவசத்திலும் உற்சவர் வெள்ளி மூஷிக வாகனத்திலும் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனர். தமிழர்களின் முழுமுதற்கடவுளாக போற்றப்படும் விநாயகப் பெருமானைக் காண, தமிழகம் முழுவதும் மட்டுமன்றி வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.