தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கீழடி: 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வெள்ளி முத்திரை நாணயம் கண்டெடுப்பு! - சிவகங்கை

சிவகங்கை: கீழடியில் நடைபெற்று வரும் 7ஆம் கட்ட அகழாய்வில், 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வெள்ளியாலான முத்திரை நாணயம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

வெள்ளி நாணயம், கீழடி, KEEZHADI
இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த வெள்ளி முத்திரை நாணயம்

By

Published : Jul 28, 2021, 7:25 PM IST

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில் தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழடி அருகேயுள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளிலும் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கொந்தகை அகழாய்வில் முதுமக்கள் தாழிகளும், பழமையான எலும்புக்கூடுகளும் கிடைத்து வரும் நிலையில், கீழடியில் சுடுமணாலால் ஆன உறை கிணறுகளும் கிடைத்துள்ளன. இதற்கிடையே, கீழடி அகழாய்வில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வெள்ளியால் ஆன முத்திரை நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சதுர வடிவு நாணயம்

இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த வெள்ளி முத்திரை நாணயம்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கீழடி பகுதியில் நடைபெற்ற வணிகத் தொடர்பின் சான்றாக வெள்ளியாலான முத்திரை நாணயம் கிடைத்திருப்பது தொல்லியல் ஆர்வலர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த நாணயத்தின் இரண்டு புறமும் நிலவு, சூரியன், விலங்கு ஆகியவற்றின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
இது வழக்கமான நாணயத்தைப் போன்று அல்லாமல் சதுர வடிவில் கிடைத்த முத்திரை நாணயம் ஆகும். இதன் கால பழமை கிமு 2ஆம் நூற்றாண்டிலிருந்து கிமு ஆறாம் நூற்றாண்டு வரை இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கீழடி: கொண்டையுடன் கூடிய அழகிய பெண் சிற்பம் - அமைச்சர் தங்கம் தென்னரசு ட்வீட்

ABOUT THE AUTHOR

...view details