சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா வேலாயுதபட்டணத்தைச் சேர்ந்தவர் வானதி. இவர் தனக்கு பூர்வீகமாக பாத்தியப்பட்ட புஞ்சை இடத்தை பாரதி வேலாங்குளத்தை சேர்ந்த சின்னத்தம்பி என்பவர் போலி ஆவணங்களை தயார் செய்து முருகேசன் என்பவருக்கு கிரையம் செய்து கொடுத்துள்ளதாக வானதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலி பத்திரம் தயார் செய்து நிலம் விற்பனை: இருவர் கைது - நிலம் விற்பனை
சிவகங்கை: போலி பத்திரம் தயாரித்து வீட்டை விற்க முயன்ற இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இருவர் கைது
புகாரின் பேரில் சின்னத்தம்பி, முருகேசன், வீரய்யா, சித்ரா உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் சின்னதம்பி, முருகேசன் ஆகிய இருவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.