தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மரத்தில் மோதிய ஆம்புலன்ஸ்  - கர்ப்பிணி உட்பட 2 பேர் உயிரிழப்பு - மரத்தில் மோதி விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸ்

சிவகங்கையில் 108 ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த கர்ப்பிணி உட்பட 2 பேர்உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை அருகே 108 ஆம்புலன்ஸ் விபத்து
சிவகங்கை அருகே 108 ஆம்புலன்ஸ் விபத்து

By

Published : Oct 21, 2022, 10:27 AM IST

சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி அருகே நெஞ்சாத்தூரை சேர்ந்தவர் குமரேசன். அவரது மனைவி நிவேதா. கர்ப்பிணியான இவருக்கு இன்று (அக். 21) அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து 108 ஆம்புலன்ஸில், நிவேதா சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். உடன் அவரது தாய் விஜயலட்சுமி மற்றும் உறவுக்கார பெண் திருச்செல்வி ஆகியோர் புறப்பட்டனர்.

இந்த ஆம்புலன்ஸ் ஊத்திக்குளம் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் நிவேதா மற்றும் அவரது தாய் விஜயலட்சுமி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆம்புலன்ஸ் டிரைவர் மலையரசன், தொழில்நுட்ப அலுவலர் சத்யா மற்றும் உறவுக்கார பெண் திருச்செல்வி ஆகியோர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க:பட்டாசுகளுக்கு தடை: சிவகாசியில் 1.5 பேர் வேலையின்றி தவிப்பு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details