தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

100 ஆண்டுகளை கடந்த நெற்களஞ்சியம் - sivagangai district

வில்லிபட்டியில் அறிவியல் பூர்வமாக கட்டப்பட்டு, 100ஆண்டுகளை கடந்த நெற்களஞ்சியம் ஒன்று இன்றும் பிரமாண்டமாக காட்சியளிக்கிறது.

100 ஆண்டுகளை கடந்த பிரமாண்ட நெற்களஞ்சியம்
100 ஆண்டுகளை கடந்த பிரமாண்ட நெற்களஞ்சியம்

By

Published : Oct 12, 2021, 1:23 PM IST

Updated : Oct 15, 2021, 4:02 PM IST

சிவகங்கை:சிவகங்கை அருகே வில்லிபட்டியில் 100 ஆண்டுகளுக்கு முன்பே அறிவியல் தொழிற்நுட்பத்துடன் சிந்தித்து இயற்கை குளிரூட்டத்துடன் கூடிய பிரமாண்டமான நெற்களஞ்சியம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.

பிரமாண்ட நெற்களஞ்சியம்

இந்த நெற்களஞ்சியம் கட்டடக் கலையில் சிறந்து விளங்கி உள்ளது, குறிப்பாக 96 செட்டிநாடு கிராமங்களில் இருக்கும் வீடுகளில் முகப்பு, ஜன்னல், சுவர், அறைகள், தூண்கள் என ஒவ்வொன்றும் ரசனையாக பார்த்து கட்டப்பட்ட அழகின் அம்சமாக உள்ளது.

நிறைய இடங்களில் நெற்களஞ்சியம் இருக்கும், ஆனால் வில்லிப்பட்டியில் உள்ள களஞ்சியம் அறிவியல் பூர்வமாக கட்டப்பட்டுள்ள பழமையான நெற்களஞ்சியம் ஆகும். தற்போதும் இது பிரமாண்டமாக காட்சியளிக்கிறது.

களஞ்சிய கட்டடத்தின் வடிவமைப்பு

மேல் தளத்தில் இருந்து தானியத்தை கொட்டி கீழ இருந்து எடுத்துக்கொள்ளலாம். தரையோட தளமே 3 அடிக்கு, தளம் 100அடி நீளம், 36 அடி அகலம் இருக்கும். களஞ்சியத்துல கொட்டுர தானியங்கள் கெட்டு போகாமல் இருக்க அந்தக் காலத்திலேயே அறிவியல் முறையில் குளிர்சாதன தத்துவத்தை கையாண்டுருக்காங்க.

களஞ்சியத்துக்கு கீழே 2 சுரங்க பாதை மாதிரி அமைச்சுருக்காங்க. இது வெயில், மழையினு எல்லா காலத்திலும் தானியங்கள் கெட்டு போகாம இருக்க முக்கிய பங்கு வகிக்கிறது. 100 வருடத்தை கடந்த இந்த நெற்களஞ்சியம் அப்பகுதியில் வாழ்ந்த நிலச்சுவாந்தாரர் ஒருவரால் கட்டப்பட்டுள்ளது.

நீர்த்த சுண்ணாம்பு, பனை வெல்லம், கலச்சிக்காய் உள்ளிட்ட இயற்கை பொருள்களை பயன்படுத்தி பாரம்பரிய முறையில கட்டப்பட்டுள்ள களஞ்சியம். ஓட்டு கையல் மூலம் அழகுபடித்தி மேற் கூரைகள் கட்டப்பட்டுள்ளது.

100 ஆண்டுகளை கடந்து நிற்கும் நெற்களஞ்சியம்

48 தூண்கள் சுற்றிலும் வைக்கப்பட்டுள்ளன. ஒரே புள்ளியில் தென்படும்படியாக தூண்கள் ஒவ்வொரு பக்கமும் தெரியும். பர்மாவில் இருந்து கொண்டுவரப்பட்ட தேக்குகள் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மக்களின் அட்சய பாத்திரமான கதை

இதனை ஆண்ட செல்வந்தர் யானை கட்டி போரடிக்கும் அளவிற்கு தானியங்களை சேமித்து வைத்துள்ளார். 1964இல் ஏற்பட்ட வெள்ளத்தின் போது இப்பகுதி மக்களுக்கு இந்த நெற்களஞ்சியம் தான் அட்சய பாத்திரமாக விளங்கியுள்ளது.

தொடர்ந்து சரியாக மழைப் பொழிவு இல்லாததால், தற்போது பெரிய அளவில் இந்த நெற்களஞ்சியத்தை மக்கள் பயன்படுத்தவில்லை. ஆண்டுகள் கடந்தாலும் இந்த நெற்களஞ்சியம் தன் கம்பீரத்தை இழக்காமல் அழகுற காட்சியளிக்கிறது.

களஞ்சிய கட்டிடத்தின் வடிவமைப்பு

இந்தக் கிராமத்தில் ஜமீன் பரம்பரையின் வம்சாவழிகள் தான் தற்போது நெற்களஞ்சியத்தை கவனித்து வருகிறார்கள் அதிக நிலப்பரப்பு கொண்டு விவசாயம் செய்துவந்துள்ளனர். 40 ஏக்கருக்கு மேலே கால்நடைகள் வளர்ப்புக்கு பயன்படுத்தி உள்ளனர். கடின காலங்களில் இப்பகுதி மக்களுக்கு சமைத்து அன்னதானங்களும் கொடுத்துள்ளனர்.

குழந்தைகளின் குருகுலம் ஆ..ஆ..

பாட சாலை இல்லாத காலத்தில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த குழந்தைகள் ஏட்டுக் கல்வி படிக்க பயன்பட்டுள்ளது. மிகவும் பிரமாண்டமாக இருக்கும் இந்த நெற்களஞ்சியம் போல் தற்போதைய சூழலில் கட்டுவது சிரமம்.

குழந்தைகளின் குருகுலம்

நூற்றுக்கணக்கான மக்களுக்கு உணவு வழங்கிய எங்கள் கிராமம் தற்போது நிலத்தடி நீருக்கு சிரமப்படுகிறோம். நெற்களஞ்சியத்தை பார்வையிட பலரும் வந்துசெல்கின்றனர்.

ஜமீன் வம்சாவளியை சேர்ந்த சிலர் நீர் ஆதாரம் இல்லாததால் பிழைப்புத் தேடி வெளி நாடுகளுக்கு வேலைக்காக சிலர் சென்றுவிட்டனர். ஜமீன் வம்சாவளியை சேர்ந்த இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு விவசாயம் செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள்.

ஆனால் நீரின்றி அமையாது உலகுஎன்பதற்கு எடுத்துக்காட்டாக நிலத்தடி நீர் இல்லாமல், இப்பகுதி இளைஞர்கள் விவசாயம் செய்வதற்கு ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதையும் படிங்க:லக்கிம்பூர் கேரி வன்முறை; ஆஷிஷ் மிஸ்ரா ஆஜர்!

Last Updated : Oct 15, 2021, 4:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details