சிவகங்கை அருகே மேலவாணியங்குடியில் தனியார் பள்ளியானது இயங்கிவருகிறது. இன்று(ஆகஸ்ட் 05) மாலை வழக்கம்போல் பள்ளி முடிந்து அதே பள்ளிக்குச்சொந்தமான வாகனத்தில் பெருமாள்பட்டி, ஈசனி, சோழபுரம், ஒக்கூர் ஆகிய கிராமங்களைச்சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பெருமாள்பட்டி சுற்றுவட்டார சாலை அருகே செல்லும்போது திருப்பத்தூர் பகுதியில் இருந்து இளையான்குடி நோக்கிசென்ற கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மீது மோதியது.
இதில் 10 குழந்தைகள் காயமடைந்ததுடன் அதில் 1 குழந்தை படுகாயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாகனம் விபத்துக்குள்ளானது குறித்து அறிந்து அங்குவந்த பெற்றோர்கள் குழந்தைகளை கண்டு கண்ணீர் வடித்தனர்.