சேலம் சின்னேரி வயக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் கடந்த நவம்பர் மாதம் சூரமங்கலம் மேற்கு ரயில்வே காலனியில் உள்ள ஒரு வீட்டின் பூட்டை உடைத்து, ஐந்தரை பவுன் மதிப்புள்ள தங்க நகையைக் கொள்ளையடித்தார். இதனையடுத்து தில்லை நகர் பகுதியில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து 50,000 ரூபாய் மதிப்புள்ள இரண்டு தங்க நகையையும் கொள்ளையடித்தார். இதனைத் தொடர்ந்து ரெட்டிப்பட்டியில் திருமண மண்டபத்திற்கு அருகே சிதம்பரம் என்பவரிடம் வழிப்பறி செய்துள்ளார். மேலும் தடுக்க வந்த பொதுமக்களையும் கத்தியைக் காட்டி மிரட்டி, பொது அமைதியையும் கெடுத்துள்ளார். இவர் இதற்கு முன்பு இதேபோன்ற பல சம்பவங்களில் ஈடுபட்ட குற்றத்திற்காக 2006 ,2008-09, 2014 - 2017 ஆகிய ஆண்டுகளில் கைது செய்யப்பட்டார்.
சேலத்தில் குண்டர் சட்டத்தின் கீழ் இருவர் கைது! - சேலம் மாவட்ட செய்திகள்
சேலம்: தொடர் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட இருவரை காவல் துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதேபோல அப்சல் என்பவர் அம்மாபேட்டை பகுதியில் கசாப்பு கடை நடத்தி வரும் நபரை மிரட்டி வாராந்திர மாமூல் கேட்டுள்ளார். அதுமட்டுமின்றி கடந்த 2019ஆம் ஆண்டு அரசு பேருந்தை சேதப்படுத்தியுள்ளார். தொடர்ந்து இச்சம்பவங்களைச் செய்து வந்ததால் அப்சல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் ஏற்கனவே 2014, 2018 ஆகிய ஆண்டுகளில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு தடுப்பு காவலில் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேற்படி இருவரும் தொடர் கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க சேலம் மாநகர காவல் துணை ஆணையர் செந்தில் பரிந்துரை செய்தார். இதையடுத்து இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.