சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேவுள்ள ஆலங்காடு பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் கடந்த 18ஆம் தேதி பெரிய கல் ஒன்றை அடையளம் தெரியாத நபர்கள் வைத்துள்ளனர். இதையடுத்து அந்த வழி தடத்தில் வந்த சரக்கு ரயில், அக்கல்லில் மோதி நின்றுள்ளது.
இதைத் தொடர்ந்து ரயில் ஓட்டுநர், தண்டவாளத்தில் கிடந்த கல்லை அகற்றிவிட்டு, இதுகுறித்து ரயில்வே காவலர்களிடம் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக ரயில்வே காவல் துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடிவந்தனர்.