தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எருதாட்டப் போட்டியில் மாடுமுட்டி ஒருவர் உயிரிழப்பு - சேலம் எடப்பாடியில் எருதாட்டம் நிகழ்ச்சி

சேலம்: எடப்பாடி அருகே நடைபெற்ற எருதாட்டப் போட்டியில் காளை முட்டி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

death
death

By

Published : Jan 19, 2020, 12:46 PM IST

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த வேம்பனேரி ஐய்யனாரப்பன் கோயிலில் பொங்கல் பண்டிகையையொட்டி எருதாட்டப் போட்டி நடைபெற்றது. இதில் எடப்பாடி, கொங்கணாபுரம், நங்கவள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

மாடு முட்டி இளைஞர் மரணம்

எருதாட்டத்தைக் காண சென்ற கோவிந்தராஜ் மகன் உத்தரகுமார் (22) காளை முட்டி படுகாயமடைந்தார். இந்நிலையில், உடனடியாக அவர் எடப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

மாடு முட்டி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

ABOUT THE AUTHOR

...view details