சேலம்: இச்சிபாளையம் பகுதியை சேர்ந்த காந்தி என்பவரது மகன் கௌதமன். இவர் சமீபத்தில் புதுப்பாளையம் பகுதியில் வசித்து கொண்டு கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் 7ஆம் தேதி கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன், பழனிச்சாமி ஆகிய இருவரும் அப்பகுதியில் உள்ள மதுபான கடையில் குடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த சேலத்தைச் சேர்ந்த கௌதம் என்பவர் இருவரிடமும் கூலிங் பீர் கேட்டு தகராறு செய்துள்ளார். இதில் பீரை கொடுக்க இருவரும் மறுக்கவே ஆத்திரமடைந்த கௌதம் இருவரையும் பிராந்தி பாட்டிலால் தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளார், இது குறித்து கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கௌதம் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.