தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த மகளுக்கு சூடு வைத்த தாய் கைது! - Youth arrested for trying to marry student

சேலம்: திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த பத்தாம் வகுப்பு மாணவிக்கு சூடு வைத்து கொடுமைசெய்த தாயை காவல் துறையினர் கைது செய்தனர்.

young guy arrested
young guy arrested

By

Published : Dec 29, 2019, 11:34 PM IST

சேலம் மாநகராட்சி பகுதியைச் சார்ந்த கூலி தொழிலாளியான ராஜ்பாபு என்பவருக்கு சத்தியபிரியா என்ற மனைவியும், பத்தாம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். இதனிடையே, இவர்களது மகளை சத்தியபிரியாவின் உறவினரான தினேஷ் ரூபன் என்பவர் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கு சத்தியபிரியாவும் சம்மதம் கூறியுள்ளார்.

மாணவியை துன்புறுத்திய தாய் கைது

இதற்கு சிறுமியின் தந்தை எதிர்ப்பு தெரிவித்தபோது பள்ளி சிறுமியும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் எனக் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சத்தியபிரியா தனது மகள் என்றும் பாராமல் அவரது கால்களில் சூடு வைத்து கொடுமை செய்ததாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த சிறுமிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டபோது இச்சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை ராஜ்பாபு சேலம் மாநகர காவல் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் விசாரணை செய்த செவ்வாய்ப்பேட்டை காவல் துறையினர் மகளுக்கு சூடு வைத்த தாய் சத்தியபிரியாவை கைது செய்த காவல் துறையினர், திருமணம் செய்ய வற்புறுத்திய இளைஞர் தினேஷ் ரூபனை போக்ஸோ சட்டத்தில் கைதுசெய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: அமமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த திமுக நிர்வாகி!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details