தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரெம்டெசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற இளைஞர் கைது! - அரசு மருத்துவமனை

சேலம்: அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவர் மருந்தை திருடி அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ரெம்டெசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற இளைஞர் கைது!
ரெம்டெசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற இளைஞர் கைது!

By

Published : May 7, 2021, 3:13 PM IST

சேலத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா தொற்று பாதித்து தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரெம்டெசிவர் மருந்து கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது.

அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளுக்கு மட்டும் மருத்துவக் குழு பரிந்துரையின் பேரில் ரெம்டெசிவர் மருந்து செலுத்தப்பட்டு வருகிறது.

இதனால் நோயாளிகளின் உறவினர்கள் ரெம்டெசிவர் மருந்தை வாங்க அவதிப்பட்டு வருகின்றனர். ரெம்டெசிவர் மருந்து தேவையை அறிந்து கள்ள சந்தையில் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை ரெம்டெசிவர் மருந்து குப்பி விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று(மே.6) இரவு சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள மருந்து சேமிப்பு அறையில் இருந்து கரோனா வார்டிற்கு எடுத்துசெல்லப்பட்ட 29 ரெம்டெசிவர் குப்பி காணாமல் போனதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

கரோனா வார்டில் பணியில் இருந்த வார்டு ஊழியர்கள், மேற்பார்வையாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

அதில், சேலம் அழகாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த ஊழியர் பிரசாந்த் ( 24)
ரெம்டெசிவிர் மருந்தை அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க:டேங்கரில் இருந்து கசிந்த ஆக்ஸிஜன் - பொதுமக்கள் அதிர்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details